×

தொழிலை காக்க கோரிக்கை மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ₹4 லட்சம் நிவாரண பொருட்கள் ஆர்டிஓவிடம் ஒப்படைப்பு

அறந்தாங்கி,டிச.24: அரசர்குளம் ஜும் ஆ பள்ளிவாசல் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண பொருட்களை ஆர்டிஓ விடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர்குளம் ஜூம் ஆ பள்ளிவாசல் சார்பில் தூத்துக்குடி திருநெல்வேலி பகுதியில் வரலாறு காணாத மழையால் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவ வேண்டும் என அரசர்குளம் ஜும் ஆ பள்ளிவாசல் சார்பில் மு டிவு செய்யப்படு நிவாரண பொருள்களாக அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்கள் ரூ.4 லட்சம் ரூபாய்க்கு சேகரிக்கப்பட்து.

இதையடுத்து நேற்று அறந்தாங்கி கோட்டாச்சியர் சிவக்குமார், வட்டாச்சியர் ஜபரூல்லா ஆகியோரிடம் நிவாரண பொருட்கள் அனைத்தையும் சரக்கு வாகனத்தில் ஏற்றி ஊராட்சி தலைவர் சாகுல்ஹமீது, ஜமாத் தலைவர் இப்ருசீம், செயலாளர் முகமது அலி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஒப்படைத்தனர். வழங்கப்பட்ட நிவாரண பொருள்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்படும் என கோட்டாச்சியர் உறுதி அளித்தார்.

The post தொழிலை காக்க கோரிக்கை மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ₹4 லட்சம் நிவாரண பொருட்கள் ஆர்டிஓவிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Aranthangi ,Arsarkulam Jum A Pallivasal ,RTO ,Nellie ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது